Tuesday, 13 January 2015

பயணம்

நம் உறவு தண்டவாளத்தைப் போல் இருக்கவேண்டும்
நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதற்கல்ல...
எங்கு பயணித்தாலும் சேர்ந்தே பயணிக்க வேண்டும் என்பதற்காக...
இரண்டில் ஒன்று பிரிந்தாலும் முடிந்து விடும்
நம் வாழ்க்கை என்னும் பயணம்... 

மரணம்

 மரணம் என்றாலும் மகிழ்ச்சியோடு ஏந்திக்கொள்வேன்
அம்மரணத்தை உன் மடியில் ஏந்திகொள்ள நேரிட்டால்... 

Sunday, 11 January 2015

பிரிவு

பிரிந்து விடலாம் பிரித்து விடலாம் என்று
ஒரு போதும் எண்ணிவிடாதே!
பிரிந்தாலும் பிரித்தலும்
பிரிவது ஒன்றுதான்!
அது என் உயிர்
உயிர் பிரிந்தாலும் வாழுவேன்  என்றும்
உன் நினைவுகளில்... 

Friday, 9 January 2015

தொலைந்தேன்

அனைத்தையும் தொலைத்து விட்டேன்
என்னையும் சேர்த்து தான்
தேடி அழைந்தேன்
தொலைந்த இடம் தெரிந்தது
ஆனால் மீட்டெடுக்க முடியவில்லை
காரணம் தொலைந்தது உன்னுள்... 

Thursday, 8 January 2015

 நானும் ஒரு தாய் என்று இன்று உணர்தேன்
உன்னை என் மார்பில் சுமந்தபோது
உன்னை சுமக்க முடியாவிடிலும்
சுமந்து செல்வேன் உன் நினைவுகளை காலந்தோறும்...

விண் பிழந்து மண் வந்தடையும் மழையே
உன்னைக்கண்ட விவசாயிக்கு ஏது மரணம்
அதை போல தான் பல இன்னல் தாண்டி வந்தடைந்தாய் என்னை
இனி உனக்கேது மரணம்
மறு ஜனனம் மட்டுமே!

Tuesday, 6 January 2015

நினைவுகள்

காரிருள் சூழ்ந்த சாலை...
கன மழை  பொழிய
மெல்லிய  இசையுடன்  பயணிக்கிறேன்
உன் (உடன்) நினைவுகளுடன்...

உறவு

பெற்றால் தாய் என்ற உறவு 
வழிகாட்டினால் தந்தை என்ற உறவு 
உடன் பிறந்தால் அண்ணன் தங்கை என்ற உறவு 
மணந்தால் மனைவி என்ற உறவு 
இத்தனை உறவுக்கும் பெயர் உண்டு 
இவர்களுக்கு சில எதிர்பார்ப்புகளும் உண்டு 
சில எல்லைகளும் உண்டு 
இதற்க்கு எவ்வித எதிர்பார்ப்பும் கிடையாது 
குறிப்பிட்ட எல்லையும் கிடையாது 
இதை வரையறுக்கவும் முடியாது
அதனால் என்னவோ இதற்க்கு பெயரிடவும் முடியாது 
அதுதான்... நாம் இருவரும் நம்மீது ஏற்ப்படுத்தி கொண்ட உறவு 
பாசம் மட்டுமே நிறைந்தது 
நம்பிக்கை மட்டுமே நிறைந்தது 
அதுதான் என்  கண்ணம்மா...

Monday, 5 January 2015

(தன்)மானம்

தன்மானம் பற்றி சற்றும் சிந்திக்காமல்
என் மனதிற்கு மகிழ்ச்சி சேர்ப்பவள்
அவளின் அன்பிற்கு முன்னால் ஒன்றும்
பெரிதல்ல என்னுடைய (தன்) மானம்

சிறை

யாராலும் விடுவிக்க முடியாது என்ற ஆணவம் அவளுக்கு
அதனால் தான் என்னை சிறை வைத்திருக்கிறாள்
அவள் கருவிழினுள்...

சரியா! தவறா!

 சரியா தவறா என்று தெரியவில்லை
தெரிந்து கொள்ளவும் முயலவில்லை
தவறா இருந்தாலும் சரிதான்
அது உனக்கென்று ஆகும்போது... 

முதல் உச்சரிப்பு...

குழந்தையின் முதல் உச்சரிப்பு அம்மா...
என் உயிரின் முதல் உச்சரிப்பு கண்ணம்மா...