Saturday, 10 August 2019

ஆழம்..

கற்பே பெரிதெனக் காணும் நாட்டில்
கொண்டவனே பெரிதனக் கற்பித்தாள்
இன்னல் பல கொண்ட போதும்
கொண்டவனை காத்தவள்

மரண படுக்கையில் இருந்த போதும்
என்னை மனம் போல மகிழ வைத்தவள்
என்நிலை வந்தபோதும் தன்நிலை மாறாது
என்னை காதலித்தவள்

என்னை கருவில் காத்தவள் என் அம்மா
காதல் என்னும் கருவில் காத்தவள்
                                                  என் கண்ணம்மா....

Friday, 9 August 2019

களைப்பு

அலுவல் களைப்பு, இருள் சூழுந்த வேளை
வீடு நோக்கிய நீண்ட தூர பயணம்
வந்தடைத்தேன்  என்னவளை காண
ஏக்கம் நிறைந்த மெல்லிய குரல்
பசுவை கண்ட கன்று போல
இன்பமாய் ஒலித்தது.... கண்ணம்மா என்று....

களைப்பெல்லாம்
கலைந்தோடியது
அவள் காதலினால்....

Thursday, 25 July 2019

உச்சரிப்பு

எங்கு சந்தித்ததோ, என்று சந்தித்ததோ என் நரம்புகளை உன் நரம்புகள்... அன்று முதல் என் நரம்புகளும் உச்சரிக்கத் தொடங்கிவிட்டது உன் பெயரை.... கண்ணம்மா

அம்மா குழந்தையின் முதல் உச்சரிப்பு...
கண்ணம்மா என் உயிரின் உச்சரிப்பு...